Follow

பேபால் கணக்கு துவங்குவது எப்படி ?

இந்தப் பக்கத்தில் நீங்கள் பேபால் தளத்தில் ஒரு புதிய உறுப்பினர் கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

பேபால் என்பது ஆன்லைனில் பயன்படுத்தப்படும் ஒரு மிகச்சிறந்த பணபரிமாற்று தளமாகும். இந்த பேபால் ஆனது 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்பு 2002 ஆம் ஆண்டு ebay இன் துணை நிறுவனமாக மாறியது. இன்றைய நவீன உலகில் பல கோடி மக்கள் பேபால் தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பேபாலின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. அதனுடைய ஒரு சில கிளைகள் இந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. பேபால் நிறுவனம் சுமார் 193 நாடுகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. மேலும் பேபால் ஆனது பல முறை தன்னுடைய சிறப்பான சேவைக்காக விருதுகளை பெற்றுள்ளது.

பேபால் தளத்தின் மூலம் நீங்கள் அமெரிக்க டாலரை மிக எளிதாக இந்திய ரூபாயாக மாற்றிவிட முடியும். உலகிலுள்ள முதன்மையான 25 நாடுகளின் நாணய மதிப்புகளில் உடனடியாக பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் என்பதுதான் பேபால் தளத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது.

பேபால் கணக்கு துவங்க அடிப்படை தேவைகள் :

  1.    பான்கார்ட்   PANCARD ( Permanent Account Number )
  2.    பேங்க் அக்கௌன்ட்    ( BANK ACCOUNT )
  3.    ஈமெயில் முகவரி          ( EMAIL ID )

 குறிப்பு : பான்கார்ட் பெயரும் பேங்க் அக்கௌன்ட் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும் .

இனி பேபால் அக்கௌன்ட் துவங்க வழிமுறைகளை பாப்போம் :

முதலில் பின்வரும் பட்டன் மீது க்ளிக் செய்யுங்கள். பிறகு பேபால் தளத்தின் முகப்பு பகுதி புதிய திரையில் தோன்றும்.



 இப்போது வரும் விண்டோவில்  " Sign Up" என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் விண்டோவில் INDIVIDUAL ACCOUNT கிளிக் செய்து CONTINUE கொடுக்கவும் .


அடுத்து வரும் விண்டோவில்

COUNTRY                        : INDIA

EMAIL ID                         : YOUR MAIL ID

PASSWORD                      : ( Eg : Abcdef @12 )

RE ENTER PASSWORD  : ( Eg : Abcdef @12 )

கொடுத்து CONTINUE கிளிக் செய்யவும் .


அடுத்து வரும் விண்டோவில் ,

First name                  : உங்கள் பேன்கார்டில் உள்ள முழு பெயர்
Middle name             : தேவை இல்லை .
Last name                 : உங்கள்  பான்கார்ட் உள்ள  Initial or  தந்தை / கணவன் பெயர்
Date of birth             : பிறந்த நாள்  தேதி
Nationality               : இந்தியா
Address line 1          : உங்கள் முகவரி
Address line 2         : முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன்படுத்தலாம்.
Town/City               : உங்கள் ஊர்
State                        : உங்கள் மாநிலம்
PIN code                 : உங்கள் பின் கோடு
Mobile Number      : உங்கள் மொபைல் நம்பர்

இவை அனைத்தும் கொடுத்த பின்னர் கீழே உள்ள I Agree to Receive Marketing கிளிக் செய்து Agree and Create Account கிளிக் செய்யவும் .

































அடுத்து வரும் விண்டோவில் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம் என ஒரு செய்தி வரும், ஆனால் அது தேவையில்லை.

கிளிக் I Will Link My Card Later கிளிக் செய்து


 Yes  Skip It  கிளிக் செய்யவும்.



இப்பொது உங்கள் பேபால் கணக்கு ரெடி கீழே சென்று Go to Your Account கிளிக் செய்யவும்.


இப்பொது பேபால் அக்கௌன்ட்க்குள் நுழைந்த பிறகு உங்கள் பேபால் கணக்கு இவ்வாறு  தோன்றும்




















Share on Google Plus

About computer

0 comments:

Post a Comment